ஆந்திர அரசு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசியை ஒட்டு கேட்பதாக குற்றச்சாட்டு..!
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, எதிர்க்கட்சித் தலைவர்கள்,பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகளை ஒட்டுகேட்பதாக குற்றம்சாட்டி உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அது குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி காட்டாட்சி நடத்துவதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு நடப்பதாகவும், ஆந்திர அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சந்திரபாபு நாயுடு மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments