ரஷ்ய கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வருவதாக தகவல்
ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிட்டதாகவும், இந்த மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கமாலியா இன்ஸ்டிடியூட், கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக கூறி அதற்கு ஸ்புட்னிக் எனப் பெயரிட்டுள்ளது.
இந்த மருந்தின் முதல் இரண்டு கட்டச் சோதனைகள் முடிந்துள்ள நிலையில் அதற்கு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் தடுப்பு மருந்து தயாராகிவிட்டதாகவும், இந்த மாத இறுதியில் இருந்து பயன்பாட்டுக்கு வருவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முந்தைய அறிவிப்பில் செப்டம்பர் மாதத்தில் மருந்து சந்தைக்கு வரும் என்றும், பெருமளவில் தடுப்பூசி போடுவது அக்டோபரில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாகவே தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத் தக்கது.
Comments