சென்னையில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு
சென்னையில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை ஏற்படுத்தி அதிகப்படுத்தியதில் பெரும்பங்கு டாஸ்மாக் கடைகளுக்கு உண்டு என்று நன்றாகத் தெரிந்தபிறகும், சென்னையில் கடைகளைத் திறப்பது கொரோனா பரவலுக்கான பெருவழி என்றும், அதுவும் ஊரடங்கு காலத்தில் திறப்பது, தவறுக்கு மேல் தவறு செய்வதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல் என கூறியுள்ள ஸ்டாலின்,
கொரோனாவின் தீவிரம் குறையாத ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் வேண்டாம்; கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு.
— M.K.Stalin (@mkstalin) August 17, 2020
யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்!
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!
Comments