அமெரிக்காவில் புதிய கொரோனா பரிசோதனை முறைக்கு ஒப்புதல்
உமிழ்நீரை பயன்படுத்தி கொரோனா தொற்றை கண்டறியும், செலவு குறைந்த விரைவுப் பரிசோதனைக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா தொற்றை கண்டறிய மூக்கு-தொண்டை மாதிரிகளை எடுத்து சோதிக்கும் முறையில் மாதிரிகளை எடுக்கும்போது தவறுகள் நேர்ந்தால் பரிசோதனையின் முடிவு தவறாகி விடும். இந்நிலையில், சலைவாடைரக்ட் எனப்படும், உமிழ்நீரை பயன்படுத்தி கொரோனா தொற்றை கண்டறியும் புதிய பரிசோதனைக்கு,அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒரு மைக்ரோலிட்டரில், அதாவது ஒரு லிட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு உமிழ்நீரில், 6 முதல் 12 வைரஸ்கள் இருந்தாலே கண்டறிந்துவிடும் அளவுக்கு இந்த பரிசோதனை திறன்வாய்ந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறை 93 சதவீதம் சரியான முடிவை தெரிவிக்கும் அளவுக்கு துல்லியமானது என்று கூறப்படுகிறது. இதற்கு இந்திய மதிப்பில் 750 ரூபாய்க்கும் குறைவான தொகையே செலவாகும்.
"Wide-spread testing is critical for our control efforts... If cheap alternatives like SalivaDirect can be implemented across the country, we may finally get a handle on this pandemic, even before a vaccine,” said @NathanGrubaugh. ? https://t.co/clk3mIciG1
— Yale School of Public Health (@YaleSPH) August 15, 2020
Comments