கடந்த ஆண்டு இதே நாள்... அத்திவரதர் மீண்டும் குளத்துக்குள் வைக்கப்பட்டார்!

0 5113

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில்  ஆனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை கடந்த ஆண்டு இதே நாளில்தான் மீண்டும் குளத்துக்குள் வைக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வாக அத்தி வரதர வைபவம் பார்க்கப்படுகின்றது. கடந்த 2019- ஆம் ஆண்டு வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்தி மரத்தால் செய்யப்பட்ட 9 அடி உயர அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டது. பிறகு ஜூலை 1 - ஆம் தேதியிலிருந்து பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலித்தார். ஜூலை 31- ஆம் தேதி வரை படுத்தபடி அருள்பாலித்த அத்திவரதர் ஆகஸ்ட் 1 - ஆம் தேதி முதல் நின்றபடி காட்சியளித்தார். இந்த நாள் 48 நாள்களும் காஞ்சிபுரம் விழாக் கோலம் பூண்டிருந்தது.

தமிழகம், இந்தியா, வெளியாடுகளிலிருந்து பக்தர்கள் திரண்டு வந்து அத்திவரதரை தரிசித்து சென்றனர். தினமும் 3 லட்சம் மக்கள் அத்திரவரதரை தரிசித்தனர். இந்த சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அத்திவரதர் என்றும் பெயர் சூட்டப்பட்டது. கிட்டத்தட்ட 48 நாள்களில் கோடிக்கணக்கான மக்கள் அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதர் வைபவம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட 17 - ஆம் தேதி முடிவுற்றதையடுத்து அத்திவரதர் மீண்டும் ஆனந்தசரஸ் கோயிலுக்குள் வைக்கப்பட்டார்.

சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் அத்தி வரதர் வெளியில் இருந்துதான் பக்தர்களுக்கு அருள்பாலித்ததாக சொல்லப்படுகிறது. அந்நியர்கள் படையெடுப்பிலிருந்து இருந்து அத்தி வரதரை காப்பாற்றவே அனந்த சரஸ் குளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். பின்னர், அந்த நிகழ்வே தொடர்ந்து விட்டது. இதற்கு முன்னதாக அத்திவரதர், 1979- ஆம் ஆண்டு வெளியே எடுக்கப்பட்டு 48 நாட்கள் தரிசனம் தந்தார். அத்தி வரதரை 108 நாட்களுக்கு மக்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டும் என்றும் சில ஆன்மீக பெரியவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments