ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 5 நாள்கள் திறப்பு
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆவணி மாதம் கோயில் நடை 5 நாள்களுக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.
அதன்படி இன்று அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், கணபதி ஹோமம் மற்றும் வழக்கமான பூஜை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கோயிலில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் பூஜைக்கு பிறகு கோயில் நடை வரும் 21ம் தேதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சபரிமலை கோயிலில் வருடாந்திர யாத்திரை நவம்பர் 16ம் தேதி தொடங்குமென திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் என்.வாசு தெரிவித்துள்ளார்.
Comments