வீட்டில் உறங்கியவரின் நெஞ்சில் அமர்ந்த சிங்கம் : சிங்கத்தைத் தள்ளிவிட்டு உயிர்தப்பிய இளைஞர்

0 7063
குஜராத்தில் குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரின் நெஞ்சில் சிங்கம் கால்வைத்த நிலையில், அவர் அதைத் தள்ளிவிட்டு உயிர்தப்பியுள்ளார்.

குஜராத்தில் குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரின் நெஞ்சில் சிங்கம் கால்வைத்த நிலையில், அவர் அதைத் தள்ளிவிட்டு உயிர்தப்பியுள்ளார்.

சிங்கத்தின் முழக்கத்தைக் கேட்டாலே எவருக்கும் இதயத் துடிப்பு நின்றுவிடும். அப்படியிருக்கும்போது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஒருவரின் நெஞ்சில் சிங்கம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கற்பனைசெய்து பார்க்க முடியுமா? குஜராத்தின் அம்ரேலி மாவட்டம் அபாரம்பரா என்னும் ஊரில் இளைஞர் விபுல் கேலையா அவரது குடிசை வீட்டில் இரவில் உறங்கியுள்ளார்.

ஆழ்ந்த உறக்கத்தின்போது நெஞ்சில் பெரிய பாரம் அழுத்தியதை உணர்ந்துள்ளார். உறக்கக் கலக்கத்தில் கண்விழித்துப் பார்த்தபோது தன் நெஞ்சின்மீது ஒரு சிங்கம் கால்பதித்து அமர்ந்துள்ளது தெரிந்தது.

அப்போது பதறாத இளைஞர் மன உறுதியுடன் தனது முழு வலுவுடன் அந்தச் சிங்கத்தைத் தள்ளி விட்டுள்ளார். அதன்பின் சிங்கம் திருப்பித் தாக்காமல் காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டது. அதற்கான இரை தான் இல்லை எனத் தெரிந்தபின்பு சிங்கம் பின்வாங்கிச் சென்றுவிட்டதாகத் துணிச்சலான இளைஞர் விபுல் கேலையா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments