உணவு விற்பனையில் சாதித்து காட்டிய கைம்பெண்
ஈராக்கில், உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள கைம்பெண் ஒருவர், தன்னைப் போன்ற பல பெண்களை வேலையில் அமர்த்தி அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவி வருகிறார்.
கணவனை இழந்த Mahiya Adham, ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நடந்த போரில் இரு மகன்களையும் இழந்த நிலையில், வருமானத்துக்கு வழி இன்றி, வீட்டில் உணவு சமைத்து அப்பகுதி மக்களுக்கு விற்று வந்தார்.
விற்பனை அதிகரித்ததை தொடர்ந்து, தன்னைப் போன்ற 20 கைம்பெண்களை பணியில் அமர்த்திய Mahiya, வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் மேலும் பல கைம்பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Comments