வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் - எல்.முருகன்

0 3430

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

சென்னை - கமலாலயத்தில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 2 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2021- ல் தமிழகத்தில் யார் ஆட்சி..? என்பதை பாஜக முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, எல்.முருகன் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உட்பட 198 பேர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் மத்தியில் பேசிய எல். முருகன், தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழப்போகிறது என்று கூறினார். எம்.ஜி.ஆரைப்போல், மக்களை ஈர்க்க கூடிய சக்தி பிரதமர் நரேந்திரமோடியிடம் உள்ளதாகவும் எல். முருகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments