எண்ணெய் கப்பலில் இருந்து கசியும் கச்சா எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த மொரீசியசுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா
ஜப்பான் கப்பலில் இருந்து கசியும் கச்சா எண்ணெய்யை கட்டுப்படுத்துவதற்கான உபகரணங்களை மொரீசியஸ் நாட்டுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
மொரீசியசின் தென்கிழக்கு கடல்பகுதியில் சென்றபோது எம்.வி. வாகாசியோ (MV Wakashio) கப்பல் பவளபாறையில் ஜூலை மாதம் 25ம் தேதி மோதியதால் உடைந்து சேதமடைந்தது. அக்கப்பலில் இருக்கும் ஆயிரம் டன் கச்சா எண்ணெய் படிப்படியாக கசிந்து வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை கப்பல் 2ஆக உடைந்தது. இதனால் மேலும் நிலமை மோசமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து மொரீசியசுக்கு ஓசன் பூம்ஸ், ரிவர் பூம்ஸ், டிஸ்க் ஸ்கிம்மர்ஸ், ஹெலி ஸ்கிம்மர்ஸ், பவர் பேக்ஸ் உள்ளிட்ட 30 டன் தொழில்நுட்ப உபகரணம் மற்றும் சாதனங்களையும், 10 பேர் கொண்ட தொழில்நுட்ப மீட்பு குழுவையும் விமானப்படை விமானத்தில் இந்தியா அனுப்பியுள்ளது.
Comments