மருத்துவர்களின் உயிர் தியாகத்தை மறைக்க வேண்டாம்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனா தடுப்புப்பணியில் தமிழகத்தில் 47 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை அதிகாரப்பூர்வமாக கூறியுள்ள நிலையில், உயிர் தியாகத்தை மறைக்காமல் வெளிப்படையாக அறி விக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலி யுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டு உள்ள அறிக்கையில், கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த 47 மருத்துவர்களின் குடும்பத் தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவியையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் தமிழக அரசு தாமதமின்றி வழங்குமாறு, மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா முன்கள வீரர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்புக் கவச உடைகளை தடையின்றி வழங்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவர்களின் உயிர் தியாகத்தை மறைக்க வேண்டாம்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல் #CoronaVirus | #MKStalin https://t.co/dsDXLCKGL2
— Polimer News (@polimernews) August 16, 2020
Comments