தமிழகத்தில் மாவட்டங்களிடையே செல்ல விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்க அரசாணை
தமிழகத்தில் மாவட்டங்களிடையே செல்ல விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ பாஸ் வழங்கும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வருவதற்கான ஆணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள ஆணையில், தமிழகத்தில் மாவட்டங்களிடையே செல்வதற்காக ஆதார், குடும்ப அட்டை, செல்பேசி எண் விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ பாஸ் வழங்குவது நாளை முதல் நடைமுறைக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வருவோருக்கு ஏற்கெனவே உள்ள இ பாஸ் நடைமுறையே தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Comments