ஆகஸ்ட் 15 -ஆம் தேதி இரவு 7.29 மணிக்கு தோனி ஓய்வு அறிவித்தது ஏன்... கேப்டன் கூல் படைத்த அபாரமான 5 சாதனைகள்

0 16400

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து விடை பெற்றுள்ளார்.  ஐ.பி.எல்  தொடருக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க சென்னை வந்த தோனி ஆகஸ்ட் 15- ஆம் தேதி இரவு சரியாக  7.29 மணிக்கு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தன் ஓய்வை அறிவித்தார். இந்த நேரத்தை தேர்வு செய்து தோனி ஓய்வு அறிவித்தற்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளது.  கடந்த 2019 ஆம் ஆண்டு ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி . நியூசிலாந்து அணியிடம் பேராடி தோற்றது.

வெற்றி பெற 240 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெற்றிக்காக போராடிய தோனி  50 ரன்களில் ரன்-அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக யுஸ்வேந்திர சாஹல் ஆட்டம் இழந்து இந்திய அணி  தோல்வி கண்ட போது நேரம் சரியாக இரவு 7.29 மணி. இந்த ஆட்டம்தான் தோனி விளையாடிய கடைசி ஆட்டம். அதை குறிப்பிடும் வகையில்தான் தோனி இரவு 7.29 மணிக்கு தன் ஓய்வை அறிவித்தார். விக்கெட் கீப்பராக, கேப்டனாக , பேட்ஸ்மேனாக தோனி படைந்த 5 சாதனைகள் அசைக்க முடியாதவை. காலத்துக்கும் பேசப்படும் அந்த சாதனைகள் பற்றி பார்க்கலாம்.

கடந்த 2007 - ஆம் ஆண்டு முதல் முதன்முறையாக நடந்த ஐ.சி.சி டி- 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் ஆனது.. இந்த அணிக்கு தோனி கேப்டனாக இருந்தார். தொடர்ந்து 2011 - ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கும் 2013- ஆம் ஆண்டு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கும் தோனிதான் கேப்டன். ஐ.சி.சி நடத்திய 3 முக்கிய போட்டிகளில் கோப்பையை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமை தோனிக்கு உண்டு.image

இந்திய அணிக்கு தோனி 332 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். வேறு எந்த இந்திய கேப்டனுக்கும் கிடைக்காத பெருமை இது. இவற்றில் 200 ஒருநாள் போட்டிகள்,60 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 72 டி- 20 போட்டிகளும் அடங்கும். சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 334 போட்டிகளில் கேப்டனாக இருந்து சாதனை படைத்துள்ளார். இந்த விஷயத்தில் தோனிக்கு இரண்டாவது இடம். அதோடு, டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று ஃபார்மட் கிரிக்கெட்டிலும் 50 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்த ஒரே வீரர் தோனிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை 6 சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற பெருமை தோனிக்கு உண்டு. அதில் 4 தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. தோனி தலைமையில் இந்திய அணி 110 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தான், தோனி மோஸ்ட் சக்ஸஸ்ஃபுல் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 165 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று வரிசையில் முதலிடத்தில் உள்ளார் .image

மேட்ச் ஃபினிஷராக கருதப்படும் தோனி 84 ஒருநாள் போட்டிகளில் அவுட் ஆகாமல் களத்தில் இருந்துள்ளார். உலகிலேயே இப்படி ஒரு சாதனை படைத்த கேப்டன் தோனிதான். இதில், 51 ஆட்டங்களில் இந்திய அணி சூப்பராக சேஸிங் செய்து 47 ஆட்டங்களில் வெற்றி பெற்றள்ளது. இரு ஆட்டங்கள் டையில் முடிந்துள்ளன. தோனி களத்திலில் இருந்த 2 ஆட்டங்களில் மட்டுமே இந்தியா தோற்றுள்ளது. தோனிக்கு அடுத்தபடியாக தென்ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் ஷான் போல்லாக் 72 ஆட்டங்களில் அவுட் ஆகாமல் களத்தில் இருந்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள், டி- 20 மூன்று ஃபார்மட்களிலும் சேர்த்து 345 இன்னிங்ஸ்களில் தோனி 123 ஸ்டம்பிங் செய்துள்ளார். சர்வதேச அளவில் 100-க்கும் மேல் ஸ்டம்பிங் செய்த ஒரே விக்கெட் கீப்பர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்திலுள்ள இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்காரா 353 இன்னிங்ஸ்களில் 99 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments