முதன்முறையாக அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக் கொடி
இந்தியா 74வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியதை ஒட்டி அமெரிக்காவின் நியுயார்க்கில் உள்ள பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் முதன் முறையாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்திய தூதரக அதிகாரியான ரந்தீர் ஜெய்ஸ்வால் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்திய - அமெரிக்க நட்பின் அடையாளமாக விளங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது என்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள The Federation of Indian Associations (FIA) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments