தியாகத்தில் மலர்ந்த விடுதலை - சில வரலாற்று நினைவுகள்

0 2499
நாட்டின் 74 வது விடுதலை நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில், சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல்களை நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

நாட்டின் 74 வது விடுதலை நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில், சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல்களை நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

பிரிட்டன் காலனியாதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த இந்தியா, தனது பண்பாட்டையும் கலாசாரத்தையும் மக்களின் செல்வங்களையும் இழந்து கொண்டிருந்த காலம். இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற அடக்குமுறைகளுக்கு எதிராக 1857ம் ஆண்டில் வெடித்த சிப்பாய் கலகம், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டது.

அந்நியப் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தியும், சுதேசிப் பொருட்களை வாங்குவதை ஊக்கப்படுத்தவும் ராட்டை சுற்றிய மகாத்மா காந்தி, கிராமங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும் என அடிமட்டத்தில் இருந்து விடுதலைக்கான உணர்வுகளைத் தூண்டினார்.

நேதாஜி, பகத்சிங், கோகலே, திலகர், நேரு, பட்டேல் போன்றவர்கள் மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். சுதந்திரம் பெறுவதை கனவாகவே கண்ட பாரதி, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று முன்கூட்டியே பள்ளுப் பாடினான்.

நாட்டு மக்களின் தியாகங்கள், தீரங்கள், போராட்ட உணர்வுகளால் எந்த வன்முறை பலத்தையும் பிரயோகிக்காமல் அகிம்சை வழியில் ஆகஸ்ட் 14ம் நாள் நள்ளிரவில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம்.

சுதந்திரத்திற்காக போராடிய காலங்கள் ரத்தமும் கண்ணீரும் தியாகமும் நிரம்பியவை. குடும்பத்தினரையும் மறந்து சுயநலத்தை ஒதுக்கி பாடுபட்டவர்களால் கிடைத்த சுதந்திரம் இது...

பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என பாரதி பாடிய வரிகளை பெருமையுடன் பாடி சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments