இந்திய குடிமகன்கள் என்ற பெருமையை இளைஞர்கள் உணர வேண்டும்-குடியரசு தலைவர்
சுதந்திர இந்தியாவின் குடிமகன்கள் என்ற சிறப்பு பெருமையை இளைஞர்கள் உணர வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நம்முடைய விடுதலை இயக்கத்திற்கு வழிகாட்டும் ஒளியாக மகாத்மா காந்தி இருந்ததற்கு நாம் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் என்றார். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னணியில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களுக்கு தேசம் கடன்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வான் பள்ளத்தாக்கில் படுகொலை செய்யப்பட்ட இந்திய வீரர்களுக்காக முழு நாடும் தலை வணங்குவதாக குடியரசு தலைவர் கூறினார்.
We are fortunate that Mahatma Gandhi became the guiding light of our freedom movement. As much a saint as a political leader, he was a phenomenon that could have happened only in India: President Ram Nath Kovind https://t.co/sRDglDUbzA
— ANI (@ANI) August 14, 2020
Comments