பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

0 5127
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை அக்டோபர் 20-ம் தேதி வரை நீடித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை அக்டோபர் 20-ம் தேதி வரை நீடித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வை அக்டோபர் 20-ம் தேதிக்குள்ளும், 2-ம் சுற்று கலந்தாய்வை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடித்து, முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் முதல் வகுப்புகள் தொடங்க வேண்டும்.

அதேபோல், விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வை நவம்பர் 15-ம் தேதிக்குள் நடத்தவும், 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதியும், நேரடி 2-ம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதியும் வகுப்புகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments