நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது.
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. விவாதத்திற்குப் பின் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதற்கிடையே சட்டப்பேரவையில் துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்த போது, முதலமைச்சருக்குப் பக்கத்தில் அவருக்கு இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இன்று ஏற்கனவே இருந்த இடத்திற்கு எதிர்ப்புறமாக எதிர்க்கட்சிகளுக்கு அருகே ஓரமாக இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆச்சர்யத்தை வெளிப்படுத்திப் பேசிய சச்சின் பைலட், துணிச்சலும், வலிமையும் கொண்ட போர் வீரனே எல்லையைக் காக்க அனுப்பப்படுவதைப் போல், தானும் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
Comments