ஊரடங்கு முடியும் வரை உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளுக்கு குறைந்தபட்சக் கட்டணம்பெற உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா ஊரடங்கு முடியும் வரை உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் மட்டுமே பெற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், காலணி தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ஊரடங்கால் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் அனைத்து நிதி நடவடிக்கைகளும் முடங்கிப்போய் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
90 விழுக்காடு மின் கட்டணத்தைச் செலுத்தும் படி மின்வாரியம் கட்டாயப்படுத்துவதாகவும், 20 விழுக்காடு கட்டணத்தை மட்டும் பெற உத்தரவிடக் கோரியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஆலைகள், நிறுவனங்களிடம் 20 விழுக்காடு கட்டணத்தை மட்டுமே பெற வேண்டும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.
கூடுதலாகப் பெற்றிருந்தால் வருங்காலத்தில் மின் கட்டணத்தில் சரிக்கட்டிக்கொள்ள வேண்டும் என்றும், ஊரடங்கு முடியும் வரை இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்தார். அலுவலகங்களில் மற்ற நிர்வாகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்துக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
ஊரடங்கு முடியும் வரை உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளுக்கு குறைந்தபட்சக் கட்டணம்பெற உயர்நீதிமன்றம் உத்தரவு #HighVoltageElectricity | #EBBill | #ChennaiHC https://t.co/GgMkZtgclT
— Polimer News (@polimernews) August 14, 2020
Comments