சட்டப்பேரவைக்கு குட்காவை கொண்டு சென்றதாக திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கைக்கு தடை கோரி வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
குட்கா உரிமை மீறல் விவகாரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிமைக் குழு தரப்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, தடை செய்யப்பட்ட குட்காவை வாங்கி வந்து, பேரவையில் திமுக எம்.எல். ஏக் கள் காட்டியது உரிமை மீறல் என வாதிட்டார். இதற்கு பதில் அளித்த திமுக வழக்கறிஞர்கள், ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர், தங்கள் எம்எல்ஏக்கள் மீது மட்டும் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக வாதிட்டனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந் ததை அடுத்து, உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிபதிகள், சட்டப் பேரவை யில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரிய வழக்குகள் மீதான விசாரணையை செப்டம்பர் 22ம் தேதி க்கு தள்ளி வைத்தனர் .
Comments