ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகளுக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு

0 3099

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலராஸில் ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அந்நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் லுகாஷென்கோ 6வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பொருளாதார தடைகளை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதில், தலைநகர் மின்ஸ்கில் உள்ள சிறையில்   கைதிகள் பலர் ஒரே அறையில் திணிக்கப்பட்டுள்ளதாகவும், அடிப்படை வசதிகள் அளிக்காமல் காவல்துறையினர் அத்துமீறி நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டங்களை தணிக்கும் வகையில், கைதிகளை அனைவரும் விடுவிக்கப்படுவர் என்று உள்துறை துணை அமைச்சர் அலெக்சாண்டர் பார்சுகோவ் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments