ஆப்பிள், கூகுள் ஆப் ஸ்டோர்களில் இருந்து ஃபோர்ட் நைட் கேம் நீக்கம்
பயன்பாட்டு கட்டண வழிகாட்டுதல்களை மீறியதாக பிரபல வீடியோ கேம்மான ஃபோர்ட் நைட்டை தங்கள் ஆப் ஸ்டோர்களில் இருந்து ஆப்பிள் இன்க் மற்றும் கூகிள் நிறுவனங்கள் நீக்கி உள்ளன.
ஆப் ஸ்டோரில் உள்ள விளையாட்டு செயலிகள் மூலம் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 346 கோடி ரூபாய் வரை சேவை கட்டணம் பெறும் ஆப்பிள் நிறுவனம், நேரடி கட்டண செலுத்தும் விதிமுறை மீறியதாக ஃபோர்ட் நைட் வீடியோ கேம்மை நீக்கியது. இதை எதிர்த்து டெவலப்பரான எபிக் கேம்ஸ் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
அதில், ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆப் ஸ்டோர் தொடர்பான கட்டண நடைமுறைகளுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், பயனர்கள் விளையாட்டுக்கான அணுகலை இழந்தால் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி #FreeFortnite என்ற ஹேஷ்டேக்குடன் இணையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
Comments