கமலா ஹாரிஸின் தாயார் மன்னார்குடி துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள கிராம மக்கள்

0 5188
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும், கமலா ஹாரிஸின் தாயார் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், அக்கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும், கமலா ஹாரிஸின் தாயார் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், அக்கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.   

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் துளசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

தங்கள் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் உலக வல்லரசான அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவதால் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா அய்யனார் கோவில், கமலா ஹாரிஸ் குடும்பத்தினரின் குல தெய்வ கோவில் என்பதும், அக்கோவிலுக்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்ததாக கோவிலை நிர்வகித்து வரும் ரமணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments