ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் அசோக் கெலாட்
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் முதலமைச்சர் அசோக் கெலாட்.
எதிர்க்கட்சியான பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் நிலையில் அதனை முறியடிக்க ஆளும் காங்கிரல் கட்சி தயாராகி வருகிறது. 19 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் காங்கிரஸ் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அசோக் கெலாட் அரசுக்கு பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்ககள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டை நேரில் சந்தித்து தோளில் தட்டிக் கொடுத்து கைகுலுக்கிய அசோக் கெலாட் நடந்ததை மறந்திருப்போம் என்றார்.
இதனிடையே 72 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடைய பாஜகவுக்கு தனித்து ஆட்சியமைக்கும் பலம் இல்லை என்பதால் அடுத்த ஆறுமாதம் காலம் அசோக் கெலாட் அரசுக்கு எந்தவித நெருக்கடியும் இருக்காது.
இந்நிலையில் பாஜகவினருடன் ஆலோசனை நடத்திய அக்கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அசோக் கெலாட்டின் அரசு நீண்ட காலம் நீடிக்காது என்று கூறினார்.
Comments