போலி இ- பாஸ் வாகனத்தை மடக்கிய டாக்ஸி ஓட்டுனர்கள்..! பூனைக்கு மணிகட்டுவது யார்?

0 10152
தமிழகத்தில் வாடகைக் கார் ஓட்டுனர்கள் இ-பாஸ் இன்றி தங்கள் வாகனங்களை இயக்க இயலாமல் தவிக்கும் நிலையில், போலியான காரணங்களைக் கூறி, சொந்த காரில் இ-பாஸ் பெற்று வாடகைக்குச் சென்ற காரை மடக்கி ஓட்டுநர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் வாடகைக் கார் ஓட்டுனர்கள் இ-பாஸ் இன்றி தங்கள் வாகனங்களை இயக்க இயலாமல் தவிக்கும் நிலையில், போலியான காரணங்களைக் கூறி, சொந்த காரில் இ-பாஸ் பெற்று வாடகைக்குச் சென்ற காரை மடக்கி ஓட்டுநர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலான நாள் முதல் வாடகைக் கார் ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை இயக்க முடியாததால், டிராவல்ஸ் மற்றும் வாடகை கார் ஓட்டுனர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், வேறு மாவட்டங்களுக்கோ பிற மாநிலங்களுக்கோ செல்வதற்கு இ- பாஸ் கட்டாயம் என்பதால் வாடகைக்கு வாகனங்களை நினைத்த நேரத்திற்கு இயக்க இயலாமலும், கடனுக்கு வாங்கிய வாகனங்களுக்கு தவணைத் தொகை செலுத்த இயலாமலும் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் சொந்த கார் உரிமையாளர்கள் சிலர், தங்கள் வாகனங்களை மருத்துவக் காரணம் என்று போலியான காரணங்களைக் கூறி இ பாஸ் பெற்று அதிக வாடகைக்கு வெளிமாவட்டங்களுக்கு சென்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த வகையில் ஒரே வாரத்தில் 50 தடவைக்கும் மேலாக வெளிமாவட்டங்களுக்குச் சென்று வந்த கார் ஒன்றை சுதந்திர வாடகை டாக்ஸி ஓட்டுனர் சங்கத்தினர் மடக்கிப் பிடித்தனர்.

இதுபோன்ற வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கண்டு கொள்ளாத நிலையில், பணிப் பாதிப்புக்குள்ளான ஓட்டுனர்கள் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் இதுகுறித்து விசாரித்தனர். அவர், தனது சொந்த உபயோகத்துக்கு செல்வதாகக் கூற, வாகனத்தில் இருந்த பயணியோ தான் வாடகை பேசி கும்ப கோணம் செல்வதாகக் கூறினார்.

அவரிடம் உள்ள இ-பாஸை வாங்கிப் பார்த்த போது, அதில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்வதற்கான அனுமதி மட்டும் இருந்தது. போலியான காரணங்களைக் கூறி தொடர்ச்சியாக இ பாஸுக்கு விண்ணப்பித்து சொந்த உபயோகம் என்று கூடுதல் கட்டணத்திற்கு வாடகைக்கு வாகனத்தை இயக்கியது தெரியவந்ததால், அந்த வாகனத்தையும் ஓட்டுனரையும் புனித தோமையார் மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சொந்தக் கார்களை வைத்திருப்போர் விதியை மீறி வாகனங்களை இயக்கிவரும் நிலையில், அரசுக்கு முறையான வரி செலுத்தி வரும் தங்களுக்கு எளிதாக இ பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வாடகை டாக்ஸி ஓட்டுனர்கள் முன்வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் விதிகளை மீறுவோர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments