சுஷாந்த் மரண விவகாரத்தில் உண்மையை அறிய தங்களுக்கு உரிமை உள்ளது-சுஷாந்தின் சகோதரி வீடியோ பதிவு
சுஷாந்த் மரண விவகாரத்தில் உண்மை என்ன என்பது குறித்து அறிவதற்கு தங்களுக்கு உரிமை உள்ளதாக, சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கிரித்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட அவர், சுஷாந்த் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தேசமே ஒன்றிணைந்து குரல் கொடுத்ததாகவும், அதனால் ஒருதலைபட்சம் இல்லாத விசாரணை கோருவது தங்கள் உரிமை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் உண்மை வெளிவர வேண்டும் என்பதை தவிர வேறெதையும் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments