அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் பிளாஸ்டிக் கழிவு 3 மடங்கு உயரும் - ஆய்வுறிக்கை

0 2081
அரசுகளும் நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்காவிடில் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் கழிவுகளின் அளவு மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளன.

அரசுகளும் நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்காவிடில் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் கழிவுகளின் அளவு மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளன.

கொரோனா பரவலால் முகக்கவசங்கள், கையுறைகள், ஆன்லைன் வணிகத்திற்காக பேங்கிங் கவர்கள் உள்ளிட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சர்வதேச திடக்கழிவு சங்கத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதே நிலை நீடித்தால் 2040 ஆம் ஆண்டில் கடலில் பிளாஸ்டிக் கழிவு 600 மில்லியன் டன் பெருகும் என்றும், இது 30 லட்சம் நீல திமிங்கலங்களின் எடைக்கு சமம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை தடுக்க கடலில் பிளாஸ்டிக் கழிவு கலப்பதை 80 சதவீதம் வரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments