பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்ற ராம்ஜென்பூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா
அயோத்தியில் நடைபெற்ற ராமர்கோவில் அடிக்கல்நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்ற, ராம்ஜென்பூமி அறக்கட்டளை தலைவர் மகந்த் நிரித்ய கோபால்தாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோபால்தாசின் உடல் நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், மதுரா மாவட்ட ஆட்சியர் மற்றும் மேதாந்தா மருத்துவரிடம் பேசி உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மகந்த்ஜியின் உடல்நிலையில் சீராக இருப்பதாகவும், மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மதுரா மாவட்ட ஆட்சியர் எஸ்.ஆர்.மிஸ்ராவும் தெரிவித்துள்ளார். ராமர் கோவில் பூமி பூஜையின் போது பிரதமர் மோடியுடன் மகந்த்ஜியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
CM has taken details of the health status on Mahant Nitya Gopaldas (in file pic) who has tested COVID19 positive. He has spoken to DM Mathura and to Dr Trehan of Medanta and requested for immediate medical attention for him at the hospital: Chief Ministers' Office pic.twitter.com/w3T8LN9Afz
— ANI UP (@ANINewsUP) August 13, 2020
Comments