ஐஎஸ்ஐ, ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இணைந்தே புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியதாக தகவல்
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இணைந்து திட்டமிட்டு புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோதச் செய்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமையான NIA, இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும், அதன் நகலாக கருதப்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கமும் இணைந்தே திட்டமிட்டு புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியதாகவும், தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததாகவும், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக NIA அதிகாரிகள் இருவர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Comments