இந்தியாவில் அமெரிக்க உயர்கல்வித்துறையின் எதிர்காலம்?

0 1497
அமெரிக்க உயர்கல்வித்துறையின் எதிர்காலம் வரும் நாட்களில் இந்தியாவை நம்பியிருக்கலாம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உயர்கல்வித்துறையின் எதிர்காலம் வரும் நாட்களில் இந்தியாவை நம்பியிருக்கலாம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சத்தால் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்கள் நடப்பு செமஸ்டர்களை ஆன்லைனில் நடத்தும் நிலையில், வரும் ஆண்டுகளில் இந்த முறை மாறி அமெரிக்க பல்கலைகழகங்கள் தங்கள் கிளைக் கல்லூரிகளை இந்தியாவில் தொடங்கும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.

உலகின் தலைசிறந்த 100 பல்கலைகழகங்கள் இந்தியாவில் இருந்தும் செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசும் திட்டங்களை வகுத்து வருகிறது. இதனால் அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் “Princeton Mumbai”, “Harvard Hyderabad”, “Oxford Kolkata” போன்ற உயர்கல்வி நிறுவனங்களை காண முடியும்.

அதே சமயம் Harvard போன்ற பல்கலைகழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளையை துவங்குவது கடினம் என எண்ணி தயங்கினாலும், மற்ற முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் இத்திட்டத்துக்கு ஆர்வம் காட்டுவதாகவே கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments