பள்ளி மாணவர்களுக்கு இ பாஸ் தேவையா என்பது குறித்து ஆலோசித்து முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி மாணவர்களுக்கு இ பாஸ் தேவையா என்பது குறித்துத் தமிழக முதலமைச்சருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.
120 பேருக்குப் புதிய குடும்ப அட்டைகள், 60 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 24 பேருக்கு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாற்றுச் சான்றிதழைக் காட்டி மாணவர்கள் மற்ற மாவட்டப் பள்ளிகளில் சேர்வதற்கு இ பாஸ் எளிமையாக வாங்கலாம் எனத் தெரிவித்தார்.
Comments