‘நிறைய பணம் சேர்ந்துவிட்டது...’ -  மகா கைலாசா கரன்சி, கைலாசா ரிசர்வ் வங்கியைத் தொடங்கும் நித்யானந்தா!

0 19946
நித்யானந்தா

ல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கித் தேடப்பட்டு வரும் குற்றவாளியான பிரபரல சாமியார் நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியாத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ‘கைலாசா’ எனும் புது நாட்டை உருவாக்கி, தன்னைப் பிரதமராகப் பிரகடனப்படுத்திக்கொண்டார் நித்யானந்தா. அதைத்தொடர்ந்து கைலாசா நாட்டுக்கென்று தனி பாஸ்போர்ட்டையும் வெளியிட்டார். கைலாசாவுக்குக் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சர்வரே கிராஷ் ஆகும் அளவுக்குத் தாறுமாறாகப் பலர் பதிவு செய்யத் தொடங்கினர்.

 
image

 

சமீப காலமாக எந்த வித முக்கிய அறிவிப்பையும் வெளியிடாமல் ஆன்மிக சொற்பொழிவுகளை மட்டும் வெளியிட்டு வந்தவர், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார். அந்த வாழ்த்துச் செய்தியுடன் தான் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கைலாசாவுக்கென்று தனி கரன்சியை உருவாக்கியுள்ளதாகவும், புது வங்கியைத் தொடங்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். இத்துடன் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி அன்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நித்யானந்தா எங்கே, எந்தத் தீவை வாங்கி, தனி அரசைப் பிரகடனம் செய்திருக்கிறார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் அவர்  கியூபா, மெக்சிகோவுக்கு அருகிலுள்ள  கரீபியன் தீவில் உள்ள குட்டி நாடான பெலிசில் பதுங்கி இருப்பதாகவும், அந்நாட்டுக் குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டையும் வைத்து இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

image

கர்நாடகா மற்றும் குஜராத் நீதிமன்றங்களில் அவர் தொடர்பான வழக்குகள் அதிதீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து நேரலையில் தோன்றி உலகம் முழுவதும் உள்ள தனது சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் சொற்பொழிவை நிகழ்த்தி வருகிறார். சர்வதேச போலிசார் நித்யானந்தாவுக்கு எதிராக  ‘புளு கார்னர்’ நோட்டீசைப் பிறப்பித்துள்ளது. ஆனாலும், நித்யானந்தாவை போலிசாரால் இதுவரை கைதுசெய்ய முடியவில்லை.

image

இந்த நிலையில் தான் நித்யானந்தா கிருஷ்ண ஜெயந்திக்கு வெளியிட்ட வாழ்த்துக் குறிப்பில் கூறியுள்ளதாவது...

“எனக்கு நிறைய நன்கொடைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை நல்ல காரியங்களுக்காக செலவிட வங்கி தொடங்கியுள்ளேன். வாடிகன் வங்கியை மாதிரியாகக்கொண்டு ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா’ உருவாக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கையையும் தயார் செய்துள்ளோம். கைலாசாவுக்கான நாட்டுக்கான பணமும் வடிவமைக்கப்பட்டுவிட்டது. உள்நாட்டுக்கு ஒரு கரன்சியையும் வெளிநாட்டுக்கு ஒர் கரன்சியையும் அச்சடித்துள்ளோம். கைலாசா ரிசர்வ் வங்கி சட்டத்தின்படியே தொடங்கப்பட்டுள்ளது. கைலாசாவுக்கான கரன்சி பெயர், வடிவமைப்பு ஆகியவை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடவுள்ளேன். சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் இருக்காது” என்று கூறியுள்ளார்.

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments