முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்றார்...

0 8133
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மயங்கி விழுந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் ரெபரல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் மூளையில் ரத்தக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சோதனைகளின் போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல் நிலையை கருதி 10 ஆம் தேதி மருத்துவர்கள் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்த மருத்துவர்கள், வென்டிலேட்டர் உதவியுடன் அவரை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. கோமா நிலைக்கு சென்றாலும், பிரணாப் முகர்ஜியின் முக்கிய உறுப்புகளும், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

84 வயதான பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் முக்கிய இலாகாக்களின் அமைச்சராக இருந்தவர். கடைசியாக இருந்த யுபிஏ ஆட்சியின் போது 2012 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2017 வரை அந்த பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் பேரில் நாட்டின் உயரிய சிவில் விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments