சச்சின் பைலட்டுடன் மீண்டும் இணைந்து செயல்படத் தயார் - முதலமைச்சர் அசோக் கெலாட்

0 1266

ராஜஸ்தான் மக்களின் வளர்ச்சிக்காக சச்சின் பைலட்டுடன் மீண்டும் இணைந்து செயல்படத் தயார் என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை சந்தித்தபின் சச்சின் பைலட் ஜெய்ப்பூர் திரும்பியுள்ளார். இந்நிலையில், சட்டமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்குவதையொட்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

கடும் விமர்சனத்திற்குப் பின் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் இருவரும் நேரில் சந்திக்கின்றனர். இதனிடையே, ஜெய்சல்மர் சென்றுள்ள முதலமைச்சர் கெலாட், சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments