கேரளாவில் சபரிமலையைத் தவிர்த்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் திங்கட்கிழமை முதல் திறப்பு
கேரளாவில் சபரிமலையைத் தவிர்த்து, வரும் திங்கட்கிழமை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலயங்களைத் திறப்பதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுக்குப் பின், கேரளத்தில் சில இஸ்லாமிய மற்றும் கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட போதும் பெரும்பாலான கோவில்கள் திறக்கப்படவில்லை. சபரிமலை போன்ற கோவில்கள் திறக்கப்பட்டால் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக வருவார்கள் என்று அஞ்சப்படுகிறது.
ஆயினும் மலையாள மக்களின் புத்தாண்டான விஷு பண்டிகையையொட்டி திங்கட்கிழமை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் கணபதி ஹோமம் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் திறக்கப்பட உள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படும் என்றும் பக்தர்கள் விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் சபரிமலையைத் தவிர்த்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் திங்கட்கிழமை முதல் திறப்பு #Kerala | #KeralaTemple https://t.co/TXgJ6Pey3M
— Polimer News (@polimernews) August 13, 2020
Comments