மூணாறு நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

0 2714
கேரள மாநிலம் மூணாறை அடுத்துள்ள ராஜமலை பெட்டி முடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் மூணாறை அடுத்துள்ள ராஜமலை பெட்டி முடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை 52 உடல்கள் கிடைத்த நிலையில் இன்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் தள்ளி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

சில உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்பு அவர்களின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது.

இன்னும் 15 முதல் 16 வரையான உடல்களை தேட வேண்டும் என்பதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஊர்வலமாக சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments