லடாக்கில் போர் விமானங்களுக்கு துணையாக எச்ஏஎல் ஹெலிகாப்டர்கள்
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், விமானப்படைக்கு உதவியாக லடாக் எல்லைப்பகுதியில் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சீனாவுடன் எல்லைப்பதற்றம் நீடிக்கும் நிலையில், மிக குறைவான நேரத்தில் இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகவும் எடை குறைவான இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தின் பிரத்யேக தேவைக்கு என்றே உற்பத்தி செய்யப்பட்டதாவும், பிரதமரின் சுயசார்புத் திட்டதில் அது முக்கிய பங்கை ஆற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே ரக 10 ஹெலிகாப்டர்கள் விமானப் படைக்கும் 5 ஹெலிகாப்டர்கள் ராணுவத்திற்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது ராணுவத்திற்கு மொத்தம் 160 இலகுரக ஹெலிகாப்டர்கள் தேவைப்படும் நிலையில், லடாக்கில் அவை ராணுவ பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது அவற்றின் திறனுக்கு அத்தாட்சியாகவும் கருதப்படுகிறது.
Comments