கால்நடைகளின் மேய்ச்சலுக்காக அமேசான் காடுகள் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
பிரேசிலின் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தாவிட்டால், 150 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெறப்போவதாக சர்வதேச முதலீட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை அதிகரிக்க, அமேசான் காடுகள் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 10,000 க்கும் மேற்பட்ட காட்டுத்தீக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராணுவத்தினர் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக அதிபர் Bolsonaro தெரிவித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ சுடர் விட்டு எரிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments