கோழிக்கோடு விமான விபத்து குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநர் கருத்து

0 4985

விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அருண்குமாரை மாற்ற வேண்டும் என விமானிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கோழிக்கோடு விமான விபத்துக் குறித்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த விமானப் போக்குவரத்து இயக்குநர் அருண்குமார், விமானம் முறையாகத் தரையிறக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள விமானிகள் சங்கங்கள், விமானப் போக்குவரத்து இயக்குநருக்குத் துறையைப் பற்றிய தொழில்நுட்பங்கள் தெரியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளன. விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் பொறுப்பில் இருந்து அருண் குமாரை நீக்கிவிட்டுத் தொழில்நுட்ப விவரங்களை அறிந்த வேறொருவரைப் பணியமர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments