அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருபோதும் தலையிட மாட்டோம்: சீனா
அமெரிக்க அதிபர் பதவி தேர்தல் தொடர்பாக அந்நாடு தெரிவித்திருந்த குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் பதவி தேர்தலில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் வில்லியம் இவானினா (William Evanina) அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியானிடம் (Zhao Lijian) கேட்கப்பட்டது. அதற்கு அவர், அதிபர் தேர்தல் அமெரிக்காவின் உள்விவகாரம் என்றும், அதில் சீனா ஒருபோதும் தலையிடாது என்றும், அதில் சீனாவுக்கு விருப்பமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
Comments