கொரோனாவிலிருந்து தப்ப சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள தமிழக மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாக ஈடுபட வேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 163 சதவீதம் அதிகரித்து விட்டதாகவும், இறந்தோரின் எண்ணிக்கை 228 சதவீதமும், இறப்பு விகிதம் 23 சதவீதமாகவும் எகிறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவி ஏறக்குறைய 7 மாதங்கள் கழித்து இப்போதுதான் தமிழகத்தில் இயல்பு நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை முதலமைச்சர் ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் என தெரிவித்துள்ள ஸ்டாலின், அரசை இனியும் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி தமிழக மக்களை கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மார்ச்சில் தொடங்கிய #Lockdown ஆகஸ்டை நெருங்கியும் #Covid19 குறையவில்லை.
— M.K.Stalin (@mkstalin) August 12, 2020
முன்னெச்சரிக்கை- பாதுகாப்பு- ஊரடங்கு- மருந்துகள் - உபகரணங்கள் வழங்கல் என அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது @CMOTamilNadu அரசு!
இந்த அரசை நம்பிப் பயனில்லை தமிழக மக்களே! சுயபாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்! pic.twitter.com/w5vtbFzVEC
Comments