உடல் உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழகம் முதலிடம்
உடல் உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேடுகோள் விடுத்துள்ளார்.
உடல் உறுப்பு தான நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் முதன்முதலாகத் தமிழகத்தில் 2014ஆம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஆணையம் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 382 கொடையாளிகளிடம் இருந்து எட்டாயிரத்து 163 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உடல் உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாகத் தமிழகம் முதலிடம் பெற்று மத்திய அரசின் விருதுகளைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
Comments