ரூ.3,500 கோடி மதிப்பில் இஸ்ரேலின் ஹெரான் ட்ரோன்களை வாங்க இந்தியா திட்டம்
இஸ்ரேலின் ஹெரான் ட்ரோன் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
எல்லையில் சீனா உடன் மோதல்போக்கு நிலவும் சூழலில், பாதுகாப்பு பலத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புராஜக்ட் சீடா எனும் திட்டத்தில், 3,500 கோடி ரூபாய் மதிப்பில் ட்ரோன்களை வாங்கவும், ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 8700 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை பயிற்சி விமானம், கடற்படை துப்பாக்கிகள் மற்றும் டேங்கர்களுக்கு எதிர்தாகுதல் நடத்துவதற்கான வெடிமருந்துகளை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments