பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்..!
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 8ம் தேதி மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, இருதினங்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்தவர் திங்கட்கிழமை வீடு திரும்பினார்.
இந்நிலையில், சஞ்சய் தத் 3 ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகரான அத்யாயன் சுமனும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்காக சஞ்சய் தத் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments