விஜிபி மகன்கள் மீது நிலமோசடி வழக்கு

0 6168

பிரபல விஜிபி குழுமத்தை சேர்ந்த தொழிலதிபர் வி.ஜி.பன்னீர்தாசின் மகன்கள் மூவர் மீது கர்நாடக போலீசார், நில மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஜிபி குடும்பத்தில் சொத்துப் பிரச்சனை என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், வி.ஜி. பன்னீர்தாஸின் சகோதரர் விஜி செல்வராஜின் மகன் பரத்ராஜ், தனது தந்தையின் சகோதரர் மகன்களான பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீது தல்கட்டபுரா காவல் நிலையத்தில் நில மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் அஞ்சனபுரா லே அவுட்டில் இருந்த, தனக்கு சொந்தமான 3 காலி வீட்டு மனைகளையும் அவர்கள் மூவரும் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டதாகவும், தற்போது தனது கையெழுத்தை பயன்படுத்தி அந்த 3 வீட்டு மனைகளையும் விற்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அதன்பேரில் தல்கட்டபுரா போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக விஜி செல்வராஜின் மற்றொரு மகனான வினோத் ராஜ் அளித்த புகாரிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments