தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா உறுதி

0 5681
தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் புதிதாக  5 ஆயிரத்து 834 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்தை எட்டியுள்ளது.

சுமார் 6 ஆயிரம் பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டதால்,  இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 67 ஆயிரத்து 492 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோ தனை செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் அதிகபட்சமாக118 பேர் உயிரிழந்ததால், பலி எண் ணிக்கை 5  ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் 28 வயது இளம் பெண் ஒருவரும், திருநெல்வேலி யில் 95 வயது முதியவர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியானவர்களில் அடங்குவர்.

சென்னையில் மேலும் 986 பேருக்கும்,  செங்கல்பட்டில் 388 நபர்களுக்கும், திருவள்ளூரில் 362 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 330 நபர்களுக்கும்,  ராணிப்பேட்டையில் 333 பேருக்கும், கோவையில் 324  நபர்களுக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments