புதிய கல்வி கொள்கை எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை - ரமேஷ் பொக்கிரியால்

0 1174
புதிய கல்விக் கொள்கை எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை என மத்திய மனித வள மேம்பாடுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை என மத்திய மனித வள மேம்பாடுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கையில் மொழி திணிப்பு கூடாது என்றும், அதில் திருத்தம் மேற்கொள்ளவும் வலியுறுத்தி திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர்  டி.ஆர். பாலு மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்தார்.

இதையடுத்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள  ரமேஷ் பொக்ரியால், புதிய கல்வி கொள்கை எந்த மொழியையும் எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கவில்லை என்றும் பயிற்று மொழியை அந்தந்த மாநிலங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து தான் ஏற்கனவே விளக்கி இருப்பதாகவும் அனைவரும் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றும்  தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments