தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்தினால் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு வெற்றி கிடைத்துவிடும்...
கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் முக்கியமானவை என குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்த மாநிலங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பஞ்சாப், பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
நாட்டில் உள்ள கொரோனா நோயாளிகளில் 80 சதவீதம் பேர் இந்த 10 மாநிலங்களில் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த 10 மாநிலங்கள் கொரோனாவை தோற்கடித்து விட்டால், அது நாட்டிற்கே கிடைத்த வெற்றி என்ற கருத்து நிலவுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்றியவருக்கு அது 72 மணி நேரத்திற்குள் கண்டறியப்பட்டு விட்டால், அவரிடமிருந்து பிறருக்கு தொற்று பரவுவதை பெருமளவு தடுத்துவிட முடியும் எனக் குறிப்பிட்ட மோடி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் 72 மணி நேரத்திற்குள் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.
Experts are saying now that if within 72 hours, a person is diagnosed, then the spread can be controlled to a great extent. So, it is important that all the people who come in contact with an infected person must be tested within 72 hours: PM Modi. #COVID19 pic.twitter.com/7FqMSXunoF
— ANI (@ANI) August 11, 2020
Comments