தேசிய கொடியை அவமதித்ததாக எஸ்.வி. சேகர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார்
தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக பா.ஜ.க. நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி சேகர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகள் மீது காவிச்சாயம் பூசப்பட்ட சம்பவங்களுக்கு முதலமைச்சர் அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதை விமர்சிக்கும் வகையில், யூ டியூப்பில் எஸ்.வி.சேகர் வீடியோ வெளியிட்டார்.
அதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் எஸ்.வி. சேகர் மீது புகாரளித்துள்ளார். அதில் அவர்,தேசிய கொடியை அவமதித்ததாகவும், முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி கலகத்தை தூண்டுவதாகவும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
Comments