ஆக. 17 முதல் பள்ளிகளில் 1,6,9 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1, 6 மற்றும் 9 - ஆம் வகுப்புகளுக்கு வருகிற 17 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை - தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாறும் மாணவர்களுக்கான சேர்க்கையும் வருகிற 17 ஆம் தேதி முதல் துவங்கும் என்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தின் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.
இதேபோல,கொரோனா சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமே இல்லை என்று கூறிய அவர், கொரோனா தாக்கம் குறைந்தபின், பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றார்.
ஆக. 17 முதல் பள்ளிகளில் 1,6,9 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் | #MinisterSengottaiyan | #AdmissionOpen https://t.co/BMKbKvjyUC
— Polimer News (@polimernews) August 11, 2020
Comments